Friday, November 16, 2007

முதல் படைப்பு

எப்போதாவது படித்த ஏதேனும் ஒரு கவிதை
உயிரை ஊடுறுவி உள்ளே தங்கிவிடுவதுண்டு. இந்தக் கவிதையும் அந்த இரகம் தான்.
எழுதிய கவிஞனைத் தெரியவில்லை. அது சரி தனக்குத்தானே தாலாட்டுப் பாடும் குயிலுக்கு ஏது முகவரி?

காதலை. காதலின் வேதனையை அனுபவித்துத்தான் தெரிய வேண்டுமென்பதில்லை

எங்கோ இதயத்தின் ஒரு மூலையில் முள் தைத்த வலியாய் சுகமாக ஒரு வலி எல்லோருக்குள்ளும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இதோ அந்த கவிஞனின் சுகமாக வலி

....சுறாவளியில் சிக்கிச் சுழல்கிறேன்
நிற்கவோ, நிலைக்கவோ நேரமில்லை

காற்றின் போக்கில் காலங்கடத்துகிறேன்
சேருமிடம் குப்பையோ, கோபுரமோ நானிறயேன்

முட்களோ, மலர்களோ
செல்லும் வலி நானறியேன்

திசையறியா வழியில் துணை கூட
ஒரு சுமைதான் எனக்கு

அழியாத ஆயிரம் நினைவுகளிருக்கலாம்
உன்பக்க நியாயங்களும் இருக்கலாம்

நிபந்தனைகளிடாதே நிர்பந்திக்காதே
நீயாக மாறச் சொல்லி என்னை

நானே நானாக இல்லாதபோது
எப்படி முடியும் நீயாக மாற? .....


சுமி பாலு